வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார்.
மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் போரால் பூமியைப் பாழ்படுத்தப் போவதைத் தடுத்தாக வேண்டும். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் இந்த அழிவால் மண் வளங்கள் வீழ்ச்சியடையும். இதனால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கிம் ஜோங் உன்னை குறிப்பிட்டு, ரோட்ரிகோ டுடெர்டே விமர்சித்துள்ளார்.