அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.
இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.
வ்ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபின் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதையடுத்து எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.