Day: August 2, 2017

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல என்று கூறினார். வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாங்கள் வட கொரியாவின் எதிரிகள் அல்ல… ஆனால் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் (வட கொரியா) ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார் டில்லர்சன். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, …

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன் Read More »

Share

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-க்குள் முடிவு செய்ய கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு  கெடு விதித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.  தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் …

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-க்குள் முடிவு செய்ய கெடு Read More »

Share

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீஃபின் தம்பியும்  பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று, …

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு Read More »

Share

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு  நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி  தினகரனுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இத்தொகுதில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று  பகிரங்கமாக கூறி தேர்தல் ஆணையம் தோ்தலை நிறுத்தியது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் …

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது Read More »

Share
Scroll to Top