சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து விளக்கமளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு மானியம் ரத்து தொடர்பான எம்.பி-க்களின் அமளி தேவையற்றது என்றார். சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்ற அவர், மானியம் முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்றார். யார் யாருக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது என்பது குறித்து முறைப்படுத்தப்படும் என்றார். யாருக்கு சமையல் எரிவாயு மானியம் தேவைப்படுகிறது, யாருக்கு தேவைப்படவில்லை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
முன்னதாக வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிணடருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 2018 மார்ச் மாதத்துடன் முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும் 2018 ஏப்ரல் முதல் மாதந்தோறும் சமையல் எரிவாயுவின் விலையை ரூ.4 கூட்டிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகள் நாட்டு மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் இவ்விகாரத்தை கையிலெடுத்த எதிர்கட்சிகள் இன்று மாநிலங்களைவைில் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடதத்க்கது.