Day: August 1, 2017

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் …

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம் Read More »

Share

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சர்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். சமையல் எரிவாயு மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து விளக்கமளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு மானியம் ரத்து தொடர்பான எம்.பி-க்களின் அமளி தேவையற்றது என்றார். …

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சர் Read More »

Share

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை …

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம் Read More »

Share

உத்தரகண்ட் – பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியது

உத்தரகண்ட் – சமோலி மாவட்டத்திலுள்ள பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், சீன அதிபர் க்ஸி ஜின்பிங்-கை  இன்னும் 3 நாட்களில் சந்தித்துப் பேசுவதாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 10லிருந்து 12 சீன ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலும், சீன ராணுவத்தினர் 200 மீட்டர்கள் பரகோட்டில் எல்லை கோட்டைத் தாண்டி வந்துள்ளனர். அச்சமயத்தில் பாதுகாப்பு …

உத்தரகண்ட் – பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியது Read More »

Share
Scroll to Top