மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா கசாகஸ்தானை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
15 நாடுகள் கலந்து கொண்ட இத்தொடரில் ஏ மற்றும் பி டிவிஷன் என இரு பிரிவுகளாக பெங்களூருவில் கடந்த 1 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் பி டிவிஷன் இறுதி சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் கஜகஸ்தானை 75 – 73 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை இந்திய அணி சூடியது. தலா 73 புள்ளிகளை சேர்த்திருந்த இரு அணிகளும், ஆட்டம் முடிய 21 வினாடிகள் இருந்த நிலையில் இந்திய வீராங்கனைகள் இரண்டு புள்ளிகளை சேர்த்து ஆட்டத்தை வெற்றி பாதைக்கு திருப்பினர். இதனையடுத்து இந்திய அணிக்கு கூடைப்பந்து சம்மேளனம் ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.
இந்த வெற்றியை அடுத்து அடுத் வருடம் நடைபெறும் போட்டியில் முன்னணி அணிகளுடன் ஏ டிவிஷனில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. தற்போது ஏ-டிவிஷன் போட்டியில் ஜப்பான் வெற்றி பெற்றது.