பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாகிஸ்தான் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் அம்பலமானதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நவாஷ் ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகளவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் செய்துள்ள ஊழல் குறித்த தகவல் அம்பலமானது. இதில் லண்டனில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. சர்ச்சயைில் சிக்கிய நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பனாமா ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மீது 8 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. இவ்விசாரணையில் நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என கண்டறியப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கபட்டது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தற்போது அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஸ் குடும்பத்தினர் மீதான புகார் குறித்தும் வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீஃப் தவிர அவரது மகள் மற்றும் மருமகனும் தவறிழைத்திருப்பதாக நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top