நேற்று (வியாழக்கிழமை) சிறிது நேரத்திற்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், பில்கேட்ஸ் மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டார்.
ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.
அமேசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும். வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழை வாங்கியுள்ள பெஸோஸ், விண்வெளி ராக்கெட் தொழில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.