பீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு லாலு மற்றும் அவரது மகன் மறுப்பு தெரிவிக்கவே நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு நிதிஷ் குமார் அளித்தார்.
தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார். மோடி துணை முதல்வராகிறார். நிதீஷின் ஜ.த. (யூ) – 71 எம்.எல்.ஏ.க்களையும் , பாஜக 53 எம்.எல்.ஏ.க்களையும், இதர ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுமாக மொத்தம் 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, நிதீஷின் புதிய கூட்டணிக்கு இருப்பதாகத் தெரிகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் நிதிஷ்குமார் பிகார் முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.