டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்
பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை, டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது. …