உத்தரப் பிரதேச மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த பூர்வா விரைவு ரெயிலில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்தது பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே உணவுகள் தரமற்றவையாக இருப்பதாக, சென்ற வாரம் கணக்குத் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் – சந்தவ்லியில், பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ரயிலில் வாங்கிய பிரிஞ்சியில் பல்லி விழுந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பயணி ரயில்வே அமைச்சருக்கு டிவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். அதில் அவர் அந்த உணவை கவனிக்காமல் உண்டுவிட்டதால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ரெயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டதையடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்தப் பெட்டிக்கு அனுப்பப்பட்டு தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.