சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை, ஒரு மந்திரத்தை நாள்தோறும் பூஜையின்போது ஜபிப்பதால் தடுக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். யோசனை கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ‘கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்’ என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
சீனா வன்முறையின் ஒரு வாக்காளியாக மாறிவிட்டது. சீனா ஒரு ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்க பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குமார் கூறினார். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் பிராந்தியத்தை திபெத்திலிருந்து சீனா கைப்பற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் சீனா செல்லவுள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் சீனா செல்லும் அவர் டோக்லாம் பிரச்சனையை எழுப்புவார் என கூறப்படுகிறது.