Day: July 23, 2017

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன. …

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை Read More »

Share

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை  இங்கிலாந்து அணி வென்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான். டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சாரா டெய்லர்  45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், …

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து Read More »

Share

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. 20 நிமிடம் உரையாற்றிய  பிரணாப் முகர்ஜி, தனது உரையில் , ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன்.” என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்திரா காந்தி …

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா Read More »

Share

சான் ஆண்டோனியோ வால்மார்ட்டில் நின்ற லாரியில் 9 பேர் இறந்த நிலையில் மீட்பு

அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரத்திலுள்ள வால்மார்ட் சூப்பர்மார்க்கெட் வாகன நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து ஞாயிறு காலை நிலவரப்படி 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வால்மார்ட் வாகன நிறுத்தத்தில் இருந்த கன்டெய்னர் லாரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் இருந்துள்ளனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். சரக்கு ஏற்றும் கன்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கன்டெய்னரில் இருந்த 38 …

சான் ஆண்டோனியோ வால்மார்ட்டில் நின்ற லாரியில் 9 பேர் இறந்த நிலையில் மீட்பு Read More »

Share

நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ்.

அமைச்சர்களின் ஊழல் குறித்துப் பேசுவதால், நடிகர் கமல் ஹாசனை மிரட்டி, அவரை பணிய வைக்க முயற்சிப்பது தமிழக  அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஊழல் குறித்து பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது. கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக் …

நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ். Read More »

Share

‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாசப்படுத்திய டோனி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டியில் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் கேப்டனுமான டோனி மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.15 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே சிக்சர் அடிக்கும் போட்டி ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அரங்கேறியது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் …

‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாசப்படுத்திய டோனி Read More »

Share

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் …

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம் Read More »

Share

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை, வடக்கு  மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முக்கிய தமிழ் நீதிபதியாக உள்ளவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இவர் மிகவும் தைரியமான நீதிபதி என்று பெயர் பெற்றவர். நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன்  நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது,  அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில், மோட்டர்சைக்கிளில் வந்த  மற்றொரு மெய்ப்பாதுகாவலர்,  வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார். அப்போது, அந்த இடத்தில்  வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த …

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு Read More »

Share
Scroll to Top