கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும் என்று விஜய்காந்த் கூறினார்.

கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் போராட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசும்போது, ”கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க அரசு நடவடிக்கை வேண்டும்.கதிராமங்கலத்துக்கு ஓஎன்ஜிசியைக் கொண்டு வந்ததில் திமுக, அதிமுகவுக்கு பங்கு இருக்கிறது. இங்கு பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் வரவில்லை. மக்களுக்காகப் போராடவே வந்திருக்கிறேன்” என்றார்.

பின்னர்  பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்வாக பதியவைக்கவே போராட்டம் நடத்துவதாகவும், மக்களின் ஆதரவு இல்லையெனில் திட்டத்தை தூக்கியெறிய வேண்டியது அரசின் கடமை என்றும்கூறினார். வெளிநாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று கூறிய அவர், சுதந்திரம் வாங்கியும் வரிகளை செலுத்தி வலியுடன் மக்கள் வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியே ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது என்றும் மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Share

1 thought on “கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த்”

  1. Pingback: கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும்: விஜய்காந்த் | thenthidal | தென் திடல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top