சசிகலா சிறைசென்றபின், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் 122 பேரும் மற்றும் ஓபிஎஸ் அணியில் 12 பேருமாக இரண்டு அணியாக செயல்பட்டு வருவது தெரிந்ததே. இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடைபெறாமலே இந்த குழு கலைக்கப்பட்டது.
தற்போது, எடப்பாடி அணியின் கை சமீபகாலமாக ஓங்கி வருவதால், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.
அண்மையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, ஓபிஎஸ் முதல்வர் பதவி விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல் நபராக ஓபிஎஸ் அணிக்கு வந்தவர் ஆறுகுட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் தற்போதுள்ள 11 எம்எல்ஏக்களில் மேலும் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலான அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. அதுபோலவே, தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ -வும் இன்னும் ஒருவருமாக, 2 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
Pingback: குதிரை பேரம் தீவிரம்: ஒபிஎஸ் TO இபிஎஸ் அணிக்கு 3 எம்எல்ஏக்கள் தாவல் ? – thenthidal | தென் திடல்