பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று, புதிதாக அங்கு பதவியேற்றுள்ள சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். டி.வி., சிறப்பு சமையலறை, சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருக்க அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஏழு மற்றும் எட்டாவது வளாகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் செயல்படவில்லை என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன்மூலம், டிஐஜி ருபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது அம்பலமாகி உள்ளது.
Pingback: சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள் – thenthidal | தென் திடல்