ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன் என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா 500MB அளவுக்குமேல் கிடைக்காது. இதர வசதிகளாவன : நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும்.
ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ஸ்டார்ட் டிவி மட்டுமல்லாது எந்த டிவியில் வேண்டுமானாலும் பொருத்திவிட்டு 3 முதல் 4 மணி நேரத்திற்கு பெரியத்திரையில் தங்கள் விருப்ப வீடியோவை பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.
டிபாசிட் தொகையான ரூ.1500 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைக்கும். மேலும் இதற்கான முன்பதிவானது ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் செப்டம்பர் 2017ல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.