நேற்று கவிதை மூலம் மறைமுகமாக அரசியலில் வரப்போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் தனது முதலாவது அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், முன்பு தன்னைத் தாக்கிப் பேசிய அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.
கிண்டல் பெயர் | யாரைக் குறிக்கிறது | ஏன் |
தம்பி | அமைச்சர் ஜெயக்குமார் | ஜெயக்குமார் கமலை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்றார். ஆகவே, உன்னைவிட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதற்காக “தம்பி”யானார் ஜெயக்குமார் |
எலும்பு வல்லுனர் | எச். ராஜா | கமலை எச்.ராஜா முதுகெலும்பில்லாதவர் என்று சொன்னதால், “எச். ராஜா பெரிய எலும்பு வல்லுனரோ?” என்று நக்கல் செய்துள்ளார் |
கல்லுளிமங்கர் என்ற ஊழலார் | தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் | ஊழலை எல்லோருக்கும் தெரியுமாறு பல ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியான பின்பும் ஆதாரம் இல்லை என கல்லுளிமங்கர்கள் போல அமைச்சர்கள் சொல்வதால் இப்பெயர் அவர்களுக்கு கொடுத்துள்ளார். |
கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.