கொசுக்களை அழிக்க கூகுளின் புதுத் திட்டம்
வெரிலி நிறுவனம் பாக்டீரியா தொற்றிய ஆண் கொசுக்களை கலிஃபோர்னியாவிலுள்ள ஃப்ரெஷ்னோவில் வெளியே அனுப்பியுள்ளது. இது மஞ்சள் காய்ச்சல் கொசுக்களை (Aedes aegypti) ஃப்ரெஷ்னோ விலிருந்து அழிப்பதற்கான முதல் முயற்சி. இக்கொசுக்களால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிக்கா வைரஸ் ஆகியவை பரவுகிறது. கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் (வெரிலி), தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது. உலகில் உள்ள பல நோய்களுக்கு முக்கிய காரணம் கொசு. …