இந்தியாவுக்கு சீனாவினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என மக்களவையில் முலாயம் சிங் யாதவ் பேசிஉள்ளார்.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாமில் பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் தடுத்து உள்ளது. இதனையடுத்து இந்தியாவை எச்சரிக்கும் விதமாக பல அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீனா, எல்லையில் படைகளையும் அதிகரித்து உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறி உள்ள இந்தியா படையை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பிய சமாஜ்வாடி எம்.பி. முலாயம் சிங் யாதவ், அண்டைய நாட்டிடம் இருந்து எழுந்து உள்ள அச்சுறுத்தலை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறிஉள்ளார். மேலும், சீனா, இந்தியாவை இலக்காக அணு ஆயுதங்களை பாகிஸ்தானில் வைத்து உள்ளது. இந்திய உளவுத்துறைக்கு நன்றாக தெரிந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், சீனாதான் நம்முடைய எதிரியாகும், பாகிஸ்தான் கிடையாது என்றும் இந்திய மார்க்கெட்டியில் சீன பொருட்களின் விற்பனை செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.