ஜிங்கோ
இது சீனாவில் வளரும் ஒரு மரத்தின் இலைகளிலிருந்து வருகிறது.
இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், உடலின் இரத்த சுழற்சியை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஜிங்கோ பிலோபா (Ginkgo biloba) – விலிருந்து எடுக்கப்படும் சாற்றில் ஃப்ளேவனாய்டு மற்றும் டெர்பனாய்டு ஆகியன எதிர்-ஆக்ஸிடன்ட் (antioxidant) குணங்கள் கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஜிங்கோவினால் ஞாபகசக்தி அதிகரிக்கக்கூடும். இதற்கு இரத்தத்தைச் சன்னமாக்கும் (Blood thinner) பண்பும் உண்டு. ஆயினும், ஜிங்கோவினால் எப்போதாவது மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
ஜின்செங்
ஜின்ஸெங் உலகிலேயே மிகவும் பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது நூற்றாண்டுகளாக ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூர்வீக அமெரிக்கர்கள் இதனை செயல் ஊக்கியாகவும், தலைவலி நிவாரணியாகவும் பயன்படுத்தினர். மேலும் கருவுறாமை, காய்ச்சல் மற்றும் அஜீரணத்துக்கான சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இன்று, தோராயமாக 6 மில்லியன் அமெரிக்கர்கள் நிரூபிக்கப்பட்ட ஜின்ஸெங் நன்மைகளால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மன மற்றும் உடல் சோர்வை நீக்கவும் தடுக்கவும் உதவுகிறது; ஜலதோஷத்தின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கான நிவாரணியாகவும், அடிக்கடி ஜலதோஷம் வராமலும் தவிர்க்கப் பயன்படுகிறது. ஆண்களின் விறைப்புத்தன்மை (Erectile dysfunction) குறைவைச் சரியாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஜின்செங் கடைகளில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதால், வாங்கும் போது தரமான, கலப்படம் இல்லாததாக தெரிந்தெடுத்து வாங்குதல் நலம்.
இஞ்சி
இஞ்சிச் செடியின் வேர், சாறுகள் மற்றும் எண்ணெய்களை தயாரிக்க பயன்படுகிறது.
இதனை நேரடியாகவும் சாப்பிடலாம். இஞ்சி குமட்டலைத் தடுக்க உதவுகிறது, மேலும் வயிற்றுப்புண்களுக்கு எதிராகவும் வயிற்றைப் பாதுகாக்கிறது.
இஞ்சியில் வலி நிவாரணிக்குரிய பண்புகளும் உள்ளன. ஆயினும், பித்தக்கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை பயன்படுத்தப்படக்கூடாது.
Pingback: நலம்தரும் மூலிகைகள் : 3 – thenthidal | தென் திடல்