Day: July 17, 2017

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் …

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு Read More »

Share

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவிக்காக தேசிய தடகள அமைப்பும், புனேவில் உள்ள ‘ஷர்ஹாத்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் நேற்று மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 21.1 கி.மீ. தூரத்துக்கான பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். …

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு Read More »

Share

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார்

பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார். பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டதை, கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்துடன் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாணவர் பருவத்தில் இருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு …

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார் Read More »

Share

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விலகியுள்லார்.  ஆஸ்திரேலிய தொடரின் போது  மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அணியில் இருந்து …

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு Read More »

Share

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார். ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ரூபா அளித்திருந்த அறிக்கையில்,  சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட …

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம் Read More »

Share

இறுதிகட்ட போரின் போது காணாமல் போனவர்கள் விவகாரம்: கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவினரே, காணாமல் போனவர்கள் பற்றி 19 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக அறிக்கை அளித்து இருந்தனர். இதில் குறிப்பிட்ட 11 பேர் காணாமல் போனதில் தொடர்பு உடையதாக முன்னாள் கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி தசநாயகே உள்பட 7 அதிகாரிகள் மீது புகார் …

இறுதிகட்ட போரின் போது காணாமல் போனவர்கள் விவகாரம்: கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது Read More »

Share

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் எதிர்கொண்டனர். போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தி, 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார்.  ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் …

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர் Read More »

Share

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் முதல் …

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது Read More »

Share
Scroll to Top