பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும், அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு , 2 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறிய பெண் டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, டிஐஜி ரூபாவின் செயல் விதிமுறைகளுக்கு மாறானது எனவும், துறை ரீதியான விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் குறிப்பிட்டார். பொதுவெளியில் கருத்து தெரிவித்த டிஐஜி ரூபாவிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி தனது புகார் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, 2வது முறையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில் சசிகலாவை சந்திக்க வந்தவர்கள் குறித்து சிறையில் இருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் மற்றும் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.