Day: July 16, 2017

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 அமர்நாத் திருப்பயணிகள் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 16 அமர்நாத் திருப்பயணிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 25 பேரு படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ரம்பன் மாவட்டத்தில் பானிஹால் பகுதியில் உள்ள நச்சிலா பகுதியில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடைபெற்றது என்றார். மேலும்,   ஸ்ரீநகரில் பதிவு செய்யப்பட்டுள்ள, பதிவு எண் JK02Y …

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 அமர்நாத் திருப்பயணிகள் பலி Read More »

Share

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகத்தில் இந்தியா முதலிடம்

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’  உலகமெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் சேர்ந்து, செய்திகளை, தகவல்களை, படங்களை பகிர்ந்துகொள்வதில் இளைய தலைமுறையினர் அலாதியான ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியா ‘பேஸ்புக்’ உபயோகத்தில் முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த சமூக வலைத்தளத்தை மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் 24 கோடி பேர் ‘பேஸ்புக்’கை உபயோகித்து வருகின்றனர். எனவே ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பயன்பாட்டில் அமெரிக்காவை இந்தியா …

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகத்தில் இந்தியா முதலிடம் Read More »

Share

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக …

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு Read More »

Share

டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும், அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு , 2 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறிய பெண் டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, டிஐஜி ரூபாவின் செயல் விதிமுறைகளுக்கு மாறானது எனவும், துறை ரீதியான விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் குறிப்பிட்டார். பொதுவெளியில் …

டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் Read More »

Share

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார். இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் …

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார் Read More »

Share

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் படகுகளையும், மீனவர்களையும் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்செல்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த சில நாட்களில் 60 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 161 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை மட்டும் விடுவிப்பதில்லை. இந்நிலையில், எல்லைதாண்டி வரும் படகுகளுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் …

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு Read More »

Share

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்…..  மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் …

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு Read More »

Share
Scroll to Top