அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
அருணாச்சல பிரதேசத்தின் பப்பும் பரே மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், லெப்டாப் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன. வெளியே முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழைக் காரணமாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து, உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கந்து ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குப்பைகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை விடுவிக்க அவசர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேசம் ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், மக்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களைத் தவிர்ப்பதற்காகவும், சீதோஷ்ண காற்றோட்டம் மற்றும் காடழிப்புகளைத் தடுக்கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், முதல்வர் ரூ. 4 லட்சம் நிலச்சரிவினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கினார்.