முதன் முதலாக சலனப்படங்களை எடுத்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்று சினிமா எனும் கலைவடிவம் தோன்றிப் பரவக் காரணமானவர்கள் லூமியர் சகோதரர்கள் ஆவர். இவர்களது திரைப்படங்களின் காட்சித் தொகுப்புக்களை புனேவில் திரையிட்ட நிகழ்சிக்கு மும்பையிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதில் சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் காணப்பட்டனர்.
லூமியர் சகோதரர்களின் தி கார்ட்டெனர் அல்லது ஜம்பிங் தி பிளாங்கெட் போன்ற திரைக்காட்சித் தொகுப்புகளை அவர்கள் ரசித்துப் பார்த்தனர். முக்கியமாக ரசிகர்கள் அதிகம் பாராட்டியது அரிதான காட்சிகளின் தொகுப்பான வித் அவர் கிங் அண்ட் குயின் த்ரூக் இந்தியா (1912) எனும் படத்தின் காட்சிகளையாகும். இது 1911 ஆம் ஆண்டின் டெல்லி தர்பார் சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.