பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர். இந்நிலையில், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்தின் ஒலிப்பதிவுக்காக அவர் உலக ஒலிப்பதிவு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவர் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
இந்த படம் இந்திய வம்சாவளி இங்கிலாந்து இயக்குனர் குரிந்தர் சத்தா இயக்கி உள்ளார். ஹுமா குரேஷி, ஹுக் போனிவில்லே, கில்லியன் ஆண்டர்சன், மறைந்த நடிகர் ஓம்புரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்தில் வெளியான இப்படம், ‘பார்ட்டிசன்-1947’ என்ற பெயரில் ஆகஸ்டு 18-ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களில், வைஸ்ராய் இல்லத்தில் (தற்போதைய ஜனாதிபதி மாளிகை) நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.