புதன் கோளைச் சுற்றப் போகும் இரட்டை செயற்கைக் கோள்கள் சென்றடைய 7 ஆண்டுகள் ஆகும்

புதன் கோளுக்கு கொண்டு செல்லும் இரட்டை செயற்கைக்கோள் தயாராகிவிட்டது. அது ஊடகவியலாளர் பார்வைக்காக நெர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.


புதன் கோளுக்கு அனுப்புவதற்கான இரட்டை செயற்கைக்கோள்கள் தயாராக உள்ளன. பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ள இந்த செயற்கைக்கோள்களை, நெதர்லாந்தில் உள்ள நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்த இரு செயற்கைக்கோள்களும், விண்ணில் ஏவப்பட்ட பின்னர் புதன் கிரகத்தை சென்றடையும். அதன் பின்னர், அவை தனித்தனியாக பிரிந்து அவைகளுக்குரிய கண்காணிப்பு பணிகளை தனித்தனியாக மேற்கொள்ளும்.

அடுக்கப்பட்ட விமானங்கள் என்று கூறப்படும் இந்த இரு செயற்கைகோள்கள் இணைக்கப்பட்ட நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்படும். அதற்கு முன், தனித்தனியாக பிரித்து இறுதி சோதனை நடைபெறும்.

இந்த இரட்டை செயற்கைக்கோள்களின் பயணம் அடுத்த ஆண்டு விண்வெளியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த செயற்கைக்கோள்கள் புதனை சென்றடைய ஏழு ஆண்டு காலம் ஆகுமாம்.

7 ஆண்டுகள் பயணித்து புதன் கோளுக்கு சென்றடையும் இந்த செயற்கைக்கோள்கள் தங்களது கண்காணிப்பை சிறப்பாக செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அது பூமிக்கு அனுப்பும் தகவல்களை பொறுத்து அடுத்தக்கட்ட ஆய்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top