ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.
ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
வெளியுறவு விவகாரங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் வரை, பல விஷயங்களைப் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். அவர்களின் உரையாடல் திட்டமிடப்பட்ட 35 நிமிட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நீட்டப்பட்டது.
“ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும், மற்றும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாங்கள் நன்முறையில் எதிர்நோக்குகிறோம்,” என்று டிரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார்.
புடின் கூறும்போது: “உக்ரேன், சிரியா, சில இருதரப்பு பிரச்சினைகள் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது”, என்றார்.