2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் இந்திய சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க் அவனது பெற்றோரை இழந்தான் தற்போது இஸ்ரேலில் அவரது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான். இந்த நிலையில் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி சிறுவன் மோஷே ஹெல்ட்பர்கை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியை முதல் முறையாக பார்த்ததும் சிறுவன் ஓடிச்சென்று டியர் திரு.மோடி…. ஐ லவ் யூ என்று கண்ணீர் பெருக்குடன் பிரதமர் மோடியை கட்டி அணைத்து கொண்டான். அப்போது அந்த சிறுவனிடம் இந்தியாவிற்கு வந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று உறுதி அளித்தார். சிறுவனுக்கும் அவனது சார்ந்த குடும்பத்திற்கும் நீண்ட கால விசா வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின் சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க் செய்தியார்களிடம் கூறுகையில்,
பிரதமர் மோடி என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார். நீ என்னுடன் மும்பைக்கு வருவாயா என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அந்த சிறுவன் கூறினான்.