கத்தாரின் பதில் எதிர்மறையானது என்றாலும் புதிய தடைகள் எதுவும் இல்லை என்று எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷௌக்ரி கூறும் போது, ” எங்களுக்கு உருப்படியான பதில் கிடைக்கவில்லை; ஒட்டுமொத்தமாக பதில் எதிர்மறையாகவுள்ளது. இப்பதில்கள் கத்தார் தனது கொள்கைகளிலிருந்து பின்வாங்கும் என்ற கருத்திற்கு இடம் தரவில்லை” என்றார்.
இதனிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் ஒன்று கூடி தங்களின் கெடு முடிந்தப் பிறகு கத்தார் அளித்துள்ள பதில்களைப்பற்றி விவாதித்தன. அவை கத்தாரிடம் 13 கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.
“கத்தாருக்கு எதிரான அரசியல், பொருளாதார தடைகள் அது தனது கொள்கைகளை நல்ல முறையில் மாற்றிக்கொள்ளும் வரை தொடரும்” என்றார் சவூதி வெளியுறவு அமைச்சர் ஜூபேர்.