இந்தியா ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம்மை பிரிப்போம்: சீன அரசு மீடியா

இந்தியா- பூடான் – சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியபோது , இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தியா, அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது.

இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே கடும் பதட்டம் நிலவி வரும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ் எழுதி வருகிறது.

 

இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறிஉள்ளது குளோபல் டைம்ஸ். “சிக்கிம் விவகாரத்தில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும். 2003-ம் ஆண்டைய ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டந்தை சீன மறு பரிசீலனை செய்யும். சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர்.

 

சுதந்திர சிக்கிம் என்பதற்கு சீன சமூதாயத்திலும் ஆதரவு உள்ளது, அவர்களுடைய கோரிக்கையானது விரிவடையும். சிக்கிமில் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகைசெய்யும்,” என சீன மீடியாவான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. பூடான் – இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி பூடானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதனால்தான் பூடான் எல்லையில் இந்தியா ராணுவத்தை நிறுத்தி உள்ளது. இதனை விமர்சனம் செய்து உள்ள குளோபல் டைம்ஸ், சமமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனா பூடானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை இந்தியா பாதிக்கிறது, என குறிப்பிட்டு உள்ளது.

 

பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் காணப்படும், இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும் தெற்கு இமாலைய புவிசார் அரசியலை மாற்றி எழுதும் என கூறிஉள்ளது சீன மீடியா.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top