இலங்கை பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளது.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்தியரத்னம், ராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ்சேனாநாயக்க, ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் மந்திரி ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.