மைக்ரோசாஃப்ட்: ‘க்ளௌட்’ சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதால், ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து தூக்குகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் உலகளாவிய விற்பனைப் பிரிவை  மறுசீரமைத்தது, தனித்தனி மென்பொருள்களுக்கு பதிலாக கிளவுட் சேவைகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.  இம்மறுசீரமைப்பு, 2014-ல் முன்னாள் நிர்வாக அதிகாரி, ஸ்டீவ் பால்மர் வெளியேறி, சத்யா நடெல்லா பதவிக்கு வந்த பின் அடுத்தடுத்து நிகழும் மறுசீரமைப்புகழில், சமீபத்திய ஒன்றாகும். இதனால் உடனே யாரையும் வேலையை விட்டு நீக்கமாட்டார்கள் என்று சிலர் சொன்னாலும், வியாபார உத்தியை மாற்றுவதால் ஆயிரக்கணக்கானோருக்கு நாட்கள் போகப்போக வேலை போகலாம் என்று தெரியவருகிறது.

இருப்பினும் இம்மறுசீரமைப்பினால் மைக்ரோசாப்டின் அன்றாடப் பணிகளில் பெரும் பாதிப்பு எதுவும் இராது.

மைக்ரோசாப்ட் கிளௌட் பிரிவின் முன்னாள் தலைவரான நாடெல்லவை நிர்வாக அதிகாரியாக நியமித்ததில் இருந்து, அதன் அஜூர் கிளவுட் கம்ப்யூட்டிங் (Azure cloud services) தளத்தை கட்டமைப்பதற்கும், பிற நிறுவனங்களுக்கு மென்பொருள் சந்தாக்களை விற்பனை செய்வதற்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகமான நபர்களையும் தேவையான பிறவற்றையும்  ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் மற்றும் ஆஃபீஸ் போன்ற தயாரிப்புகளுக்கான மென்பொருள்  உரிமங்களை ஒரு பதிப்புக்கு ஒரு தடவை என்ற முறையில் பிற நிறுவனங்களுக்கு விற்று வந்தது. தற்போது அந்த வியாபாரத்தை மாற்றியமைத்து வருடத்திற்கொருமுறை சந்தா போன்ற அடிப்படையில் கிளௌட் முறையிலான வியாபாரத்தை முன்னிறுத்த முயற்சி செய்கிறது. இவ்விஷயத்தில் மைக்ரோசாப்ட் இன்னும் அமேசானின் ஏ.டபிள்யூ.எஸ்.(AWS) வணிகம்,  மற்றும் கூகிளின் வளர்ந்து வரும் கிளௌட் பிரிவு ஆகியவற்றை எட்டவில்லை என்றாலும் கடுமையாக போட்டியிட முயல்கிறது.

இப்போது மைக்ரோசாப்ட்  இரண்டு தனித்துவமான பகுதிகளில் கவனம் செலுத்துகிறது: 1 – பெரிய நிறுவன வாடிக்கையாளர்கள்;  2- சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள். ஆயினும் மைக்ரோசாஃப்டில் அடுத்துவரும் மாற்றங்கள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய வர்த்தக வணிகத்தின்  நிறைவேற்றுத் துணைத் தலைவரான ஜுட்சன் அல்தோஃப் (Judson Althoff) அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், “சரியான நேரத்தில் சரியான வாடிக்கையாளருக்கு சரியான ஆதாரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக” விற்பனை பிரிவு மறுசீரமைக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது எந்த அளவுக்குப் பணிநீக்கங்கள் இருக்கும் என்பது தெளிவாக  தெரியவில்லை. ஆனால் சில பத்திரிகைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களில் பணிநீக்கங்கள் நடக்கலாம் என்று கூறுகின்றன.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top