இந்திய, திபெத், பூட்டான் முச்சந்திப்பில், சீனாவின் சாலைத் கட்டுமானம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்களினிமித்தம், சிக்கிம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கூடுதலாக வீரர்களை குவித்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளையும் சீனப் படை வீரர்கள் தகர்த்தாக கூறபடுகிறது.
இந்நிலையில் சீனா, பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் 1962 போரை குறிப்பிட்டு இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கையை விடுத்தது. இதனையடுத்து இந்திய அரசு எல்லையில் அடாவடியாக சாலை அமைக்கும் திட்டம் விவகாரத்தில் சீனாவிற்கும் இந்தியா எச்சரிக்கையை விடுத்தது. டோக்லாம் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் கவலையை அளிக்கிறது என இந்தியா தெரிவித்தது. எங்களுடைய ராணுவ நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என இந்தியா தெரிவித்துவிட்டது.
1962–ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017–ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கு சீனா, 1962 -ல் இருந்த சீனாவும் தற்போதைய சீனாவும் வெவ்வேறானவை என்று இந்தியா சொன்னதையே திருப்பியடித்தது.
இதனால் சிக்கிமை ஒட்டிய இந்திய – சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், சிக்கிம் சென்று படைப் பிரிவு தலைமையகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்திய-சீன வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே பதிலடி தர தயாராக இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.