உ.பி.-யில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி இடமாற்றம்

உத்தரபிரதேசத்தில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


உத்தரப்பிரதேச மாநிலம் சாயானா சர்க்கிள் பகுதியை சேர்ந்த, ஸ்ரேஷ்டா தாகூர், புலந்ஷாஹர் பகுதியில் காவல் அதிகாரியாக பணியாற்றினார். ஆவணங்களின்றி வாகனம் இயக்கியதாக எழுந்த புகாரில், பாஜக தொண்டர் ஒருவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இதையடுத்து, பெண் காவல் அதிகாரியை முற்றுகையிட்ட பாஜகவினர் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யப்பட்ட நிலையில், மேலிட உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சியனா சர்க்கிள் பகுதியில் பணி புரிந்து வந்த அவர் பஹ்ரைச் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட 234 அதிகாரிகளின் பட்டியலை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தாக்கூர் கூறுகையில், “என்னுடைய இடமாற்றம் வழக்கமானது அல்லது அரசியல் என்று எதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் உண்மை என்னவெனில், என்னுடைய சக பேஜ் அதிகாரிகள் யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top