இன்று கனடாவின் 150-வது பிறந்ததினம்

இன்று (ஜூலை 1) கனடாவின் 150-வது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் ஆட்டவா-வில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சுமார் 500,000 பார்வையாளர்கள் பார்லிமென்ட் ஹில்லில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  கனேடிய அரசு இக்கொண்டாட்டங்களுக்காக அரை-பில்லியன் கனேடிய டாலர்களை செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கனேடிய மேப்பிள் லீஃப் கொடி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மலர்ந்துள்ளது. 38 மில்லியன் மக்கள் உலகின் இரண்டாவது பெரிய நாட்டின் பெருமையை காட்டுகின்றனர்.

ஆயினும் எல்லோரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை.  கனடாவின் சில சுதேசிய மக்கள் காலனியாதிக்கம் மற்றும் அடக்குமுறை முதலிய காரணங்களால் தாம் கனடா தினத்தைக்  கொண்டாடப்போவதில்லை என்கின்றனர். அவர்கள் ஜூலை 1, 1867 இல் கனடாவை உருவாக்கும் ஆவணங்களை ஐரோப்பியரும் கான்ஃபெடேஷனின் தந்தையரும் ஒப்பிடுவதன் முன்னரே ஆயிரமாயிரம் ஆண்டுகள் “கனடா”வில் வசித்து வந்திருக்கிறோம் என்று கூறுகின்றனர்.

தமது எதிர்ப்பைக் காண்பிக்க, புதனன்று பார்லிமென்ட் ஹில்லில் அமெரிக்க இந்தியர்களின் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது. அவர்களின் தலைவர் ஒருவர் கூறுகையில், “இது கொண்டாட்டம்,  அமைதி மற்றும் நட்புறவிற்கான நேரம்; கனேடியர்கள் நலமாக இருக்க நாம் வாழ்த்துகிறோம்”, என்றார். ஆனால், கனடாவின் 150-வது பிறந்த விழாவுக்குப் பதிலாக, ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்பாக “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக” நாம் இங்கே வாழ்ந்து வந்ததைக் கொண்டாடப் போகிறோம், என்று ஒரு கனேடிய பூர்வீக குடியின் தலைவர் டான் மாரகிள் கூறினார்.

150 வது கனடா தின கொண்டாட்டங்களை ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாத தாக்குதல், பிற எதிர்ப்புகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உளவுத்துறை மற்றும் போலிசார் தேவையான அனைத்தை முன்னேற்பாடுகளையும் செய்கின்றனர் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top