செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

அமெரிக்காவில் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் குழந்தைகளைக் கடத்திச் சென்று செவ்வாய் கிரகத்தில்  அடிமைக் குடியிருப்பில் வைத்திருப்பதாக ஒரு புதிய சதி கோட்பாட்டை (Conspiracy Theory) வெளியிட்டனர். இது யாராலும் நம்பமுடியாததாக இருந்தாலும்,  நாசா அதற்கு அமைதியாக,  அப்படி எந்த அடிமைக் குடியிருப்பும் செவ்வாயில் இல்லை என மறுத்திருக்கிறது.

வியாழனன்று (ஜூன் 29) அலெக்ஸ் ஜோன்ஸின் ரேடியோ நிகழ்ச்சியில், ராபர்ட் டேவிட் ஸ்டீல் என்பவர் கூறியதாவது :

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.  கடந்த 20 வருடங்களாக பூமியிலிருந்து கடத்தப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குழந்தைகளால் அக்காலனி நிரப்பப் பட்டுள்ளது. செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தபின்,  அந்த காலனியில் அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வெறு வழியில்லை.

இதனைப் பற்றி அலெக்ஸ் ஜோன்ஸ் கருத்துக் கூறுகையில்,

நாசாவின்  90 சதவிகித பயணங்கள் இரகசியமானவை என்று எனக்குத் தெரியும். உயர் மட்ட நாசா பொறியியலாளர்கள் சிலர் என்னிடம் சொல்வது என்னவென்றால், “உங்களுக்கு அங்கே நடக்கும் விஷயங்கள் எதுவுமே தெரியாது; என்னென்னவோ  நடக்கின்றன”. என்று ஜோன்ஸ் ஸ்டீலிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், “அங்கே என்ன நடக்கிறது என்று நாம் பார்க்க நாசா விரும்பவில்லை. ஆகவே ஒவ்வொரு முறையும் நாசாவின் ஆய்வுக்கலங்கள் (probes) அந்த பக்கமாகப் போகையில், அவர்கள் அவற்றை பதிவுசெய்யவிடாமல் அணைத்துவிடுகிறார்கள்”, என்றார்.

டெய்லி பீஸ்ட் என்ற பத்திரிகை இது குறித்து நாசாவின் கருத்தைக் கேட்டபோது, கலிபோர்னியாவிலுள்ள நாசா ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தின் பேச்சாளரான கய் வெப்ஸ்டர், அதற்கு பதிலளித்தார்.

“செவ்வாயில் நாங்கள் அனுப்பிய ரோவர் ஆய்வுக்கலங்களே உள்ளன. மனிதர்கள் யாரும் இல்லை. சென்ற வாரம் சில வதந்திகள் வந்தன. ஆனால், கண்டிப்பாக அங்கே மனிதர்கள் இல்லை.”

என்று அவர் கூறினார்.

அலெக்ஸ் ஜோன்ஸ் இதற்கு முன்னர் பல சதிக் கோட்பாடுகளை முன் வைத்திருக்கிறார். செவ்வாயைக் குறித்து வேறு பல சதிக் கோட்பாடுகளும் உள்ளன. அவைகளுடன் இப்புதிய சதிக் கோட்பாடும் சேருகின்றது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top