ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன
புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது. இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி …