Month: July 2017

அமெரிக்காவின் ஹாணலுலுவில் சாலையில் செல்லும் பாதசாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள ஹாணலுலு நகரில் மொபைல் ஃபோன் குறித்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி சாலையில் செல்லும் பாதசாரிகள்  மொபைல் உபயோகித்தால் அபராதம் விதிக்கப்படும். பாதசாரிகள் குறுஞ்செய்தி அல்லது போனில் பேசிக்கொண்டே செல்வதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் தடுக்கவே இத்தகைய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சாலைகளில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தினால் 15 முதல் 35 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நடைமுறைப்படுத்தப்பட …

அமெரிக்காவின் ஹாணலுலுவில் சாலையில் செல்லும் பாதசாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை Read More »

Share

அ.தி.மு.க. கட்சியைக் கைப்பற்ற தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை

அ.தி.மு.க  அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் தினகரன் ஆக.5 முதல் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும்  கூறியிருந்தார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தினகரன்  5-ந்தேதி அன்று   வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தாம் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   அன்று மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி வெளியானதை அடுத்து தலைமை …

அ.தி.மு.க. கட்சியைக் கைப்பற்ற தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை Read More »

Share

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது …

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு Read More »

Share

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது

பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் …

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது Read More »

Share

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா வெற்றி

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா கசாகஸ்தானை  வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 15 நாடுகள் கலந்து கொண்ட இத்தொடரில் ஏ மற்றும் பி டிவிஷன் என இரு பிரிவுகளாக பெங்களூருவில் கடந்த 1 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் பி டிவிஷன் இறுதி சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் கஜகஸ்தானை 75 – 73 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை இந்திய …

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா வெற்றி Read More »

Share

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் இந்தியாவில் பெரும் மாற்றமாம்: மோடி சொல்கிறார்

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சகல பெருட்களின் விலைகளும் வெகுவாக  குறைந்துவிட்டது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று வானொலியில் உரையாற்றிய நரேந்திர மோடி, சிறந்த முன்மாதிரியான திட்டத்துக்கு இது ஒரு உதாரணம் என்றார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில அரசுகள் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளன. மீட்பு …

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் இந்தியாவில் பெரும் மாற்றமாம்: மோடி சொல்கிறார் Read More »

Share

அப்துல்கலாம் சிலை அருகே பைபிள், குரான் அகற்றப்பட்டன

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி கடந்த 27ல் திறந்துவைத்தார். அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டதுடன், அதனருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது.  சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரங்களினால்,  அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், பகவத் கீதைக்கு அருகில் குரான் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களையும் வைத்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை கலாமின் …

அப்துல்கலாம் சிலை அருகே பைபிள், குரான் அகற்றப்பட்டன Read More »

Share

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார். அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார். தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மன்னிப்பு கேட்காவிட்டால் …

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் Read More »

Share

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க …

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா Read More »

Share

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் பெயர்ப்பலகை கூடாது : முதல்வர் சித்தராமையா

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைக்கலாகாது என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் கன்னட அமைப்பினர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகைகளை தார் பூசி அழித்தனர். மேலும் மெட்ரோ வில் பணியாற்றும் இந்தி பேசும் அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும் போர்க்கொடி …

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் பெயர்ப்பலகை கூடாது : முதல்வர் சித்தராமையா Read More »

Share
Scroll to Top