சீனா, பூடான், இந்திய எல்லையில் பதற்றம்

பூட்டானிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு  சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது.  இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.  இதன்விளைவாக, புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

சுமி பள்ளத்தாக்கிற்கு எதிரில் இருக்கும் டோக்லம் பீடபூமியில் நிகழும் இம்மோதல்கள், பூடானின் ஆயுதப் படைகளை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன், அங்கு பணியிலிருக்கும் இந்திய துருப்புக்கள் எதிர்கொள்கின்றனர்.

மற்றொரு அறிவிப்பின்படி, ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் வியாழக்கிழமை சிக்மிற்கு வருகை தருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, இந்தியாவின் பூட்டான் தூதர் வொட்ஸோப் நியாஜெல், தனது நாட்டிலுள்ள டோக்லமின் பகுதியிலுள்ள ஜோம்பில்ரியில், சீன இராணுவ முகாமை நோக்கி ஒரு சாலையை கட்டியெழுப்பவது குறித்து தமது நாடு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், சாலைகட்டும் பணியை உடனடியாக  நிறுத்தம் செய்ய செய்து  நிலைமையை சரியாக்கவும் பீஜிங்கை சீனா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெய்ஜிங், கைலாஷ் மன்சரோவர் யாத்ரீகர்களுக்கு நாது லா கணவாய் திறக்கப்படுவதற்கு முன்பாக “இந்தியா அதன் பிழைகளை சரி செய்ய” புது தில்லியிடம் கூறியது. மேலும் சாலைக் கட்டுமானம் நடைபெறும் பகுதி  சீனாவின் “எல்லைக்குட்பட்டது” என்றும், இந்தியாவுக்கும் பூட்டானுக்கு சொந்தமானபகுதியல்ல என்றும் கூறியுள்ளது. வேறு எந்த நாட்டிலும் தலையிட இந்தியாவிற்கு உரிமை இல்லை என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கருத்துக் கட்டுரையில், இந்த நிலைப்பாடு தொடர்ந்தால், இந்தியாவிற்கு விதிகளைக் கற்பிக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top