ஏ.டி.எம். உபயோகத்தில் வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன

இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பார்க்லேஸ் வங்கி இந்த் முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.
இந்த ஏடிஎம்கள் எப்படி பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஷெப்பர்ட்-பேரென் என்பவர் ஒரே ஒரு நிமிடம் தாமதமாக வங்கிக்கு சென்றதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர் வங்கி மூடியிருந்தாலும் பணம் எடுக்க வசதியாக ஓர் இயந்திரம் இருந்தால் என்ன என்று சிந்தித்தார். அந்த இயந்திரத்தில் ஓர் அட்டையை நுழைத்தால் அது பணம் வழங்கியது. இந்த முறையை அவர் சாக்லேட் வழங்கும் இயந்திரத்தைப் போன்று செயல்படும் தன்மையுடன் அமைத்தார்.
முதல் ஏடிஎம் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் திறக்கப்பட்டது. ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. ஆனால் ஆறு இலக்கம் என்பது நான்காக குறைக்கப்பட்டது. ஏன்? பேரெனின் மனைவிக்கு ஆறு இலக்கங்களை நினைவுபடுத்த இயலவில்லை. எனவே மாற்றப்பட்டதாம்!
இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் இன்று சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.
இன்றைய தினத்தை நினைவுபடுத்தும் விதமாக பார்க்லேஸ் வங்கி தனது முதல் ஏ டி எம் அமைந்திருந்த என்ஃபீல்ட் கிளையை தங்கத் தகடுகளால் அலங்கரித்திருந்தது. அதையும் கடந்து வாடிக்கையாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது.
தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகளவில் வந்து விட்டாலும் பணம் எடுக்கும் இயந்திரங்களுக்கான தேவை குறையவில்லை என்கின்றனர் வங்கி அதிகாரிகள்.
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top