பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில், அதிகாரபூர்வ இல்லத்தில், அமைச்சர் KT.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :
“நான் எல்லா தனியார் நிறுவன பாலையும் குற்றம்சாட்டவில்லை. பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். என் புகாருக்கு பின்னர் பாலில் கலப்படம் செய்வது குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சில தனியார் நிறுவன பால் பவுடர்களில் ப்ளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா கலந்துள்ளது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ரசாயனங்கள் கலந்த பாலை குடிப்பதால் பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றது. மக்கள் இதை புரிந்து நல்ல பாலை வாங்கி பருகவேண்டும். கலப்பட பாலை தடை செய்யவும் அண்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுவேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.