Day: June 28, 2017

‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு’: மோடி நெதர்லாந்தில் பெருமிதம்

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சமீபத்திய பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ளவர்களில் பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., கார்டு வழங்கப்படும். …

‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு’: மோடி நெதர்லாந்தில் பெருமிதம் Read More »

Share

செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி  ரோவர், 2004ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது. தற்போது செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்ததற்கான தடயத்தை ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தின் விளிம்பில் தற்போது ரோவர் உள்ளதாகவும், இந்தப் பள்ளம் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். …

செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் Read More »

Share

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரும், 30ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, …

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை Read More »

Share

ஏ.டி.எம். உபயோகத்தில் வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன

இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பார்க்லேஸ் வங்கி இந்த் முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது. இந்த ஏடிஎம்கள் எப்படி பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஷெப்பர்ட்-பேரென் என்பவர் ஒரே ஒரு நிமிடம் தாமதமாக வங்கிக்கு சென்றதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர் வங்கி மூடியிருந்தாலும் பணம் எடுக்க வசதியாக ஓர் இயந்திரம் இருந்தால் என்ன என்று சிந்தித்தார். அந்த …

ஏ.டி.எம். உபயோகத்தில் வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன Read More »

Share

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 377 ரன்கள் குவிப்பு

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லீசெஸ்டரில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது. பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் …

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 377 ரன்கள் குவிப்பு Read More »

Share

பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல்

பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில், அதிகாரபூர்வ இல்லத்தில், அமைச்சர் KT.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது : “நான் எல்லா தனியார் நிறுவன பாலையும் குற்றம்சாட்டவில்லை. பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். என் புகாருக்கு பின்னர் பாலில் கலப்படம் செய்வது குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சில தனியார் நிறுவன பால் …

பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல் Read More »

Share

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு

ஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்கள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள்  அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர். …

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு Read More »

Share
Scroll to Top