கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையின்மை விதிகளை (Antitrust rules) மீறியதால், அபராதத்தொகையாக 2.42 பில்லியன் யூரோ செலுத்தியாக வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது இணையத் தேடல் இயந்திரம் ( Search Engine) மூலம் கொடுக்கும் தேடல் முடிவுகளில், கூகிள் தனது சந்தை ஒப்பீட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் அநுசரித்து, சேவைகளை மாற்றியமைக்காவிட்டால், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் உலகளாவிய தின வருமானத்தில் 5% வரை அதிகமாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.