வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஹானேவின் சதம் – 104 பந்துகளில் 103 ரன்கள் – இந்தியாவை 310/5 என்ற ரன்களில் தனது இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்ள உதவியது. மழையால் தாமதமாக துவங்கிய போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் தலைவர் கோலி 66 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார், அடுத்து விளையாடிய மே. இந்திய அணி 205/6 என்ற ரன்களில் விளையாட்டை முடித்துக் கொள்ள இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மே. இந்திய அணியும் பெரிய ரன் எண்ணிக்கையை அடைய எவ்வித முயற்சிகளும் செய்யாமல் ஆடியது.
இந்த வெற்றியானது கரீபியன் தீவுகளில் இந்தியா ரன்கள் அடிப்படையில் பெற்ற பெரிய வெற்றியாகும். இந்த ஆட்டத்தின் மூலம் 300 ரன்களை அதிக முறை எடுத்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெறுகிறது. இந்தியாவிற்கு இது 96 ஆவது 300 ரன்களாகும். ஆஸ்திரேலியா 95 முறை 300 ரன்களை கடந்துள்ளது.
ரோகித் சர்மா விளையாடததால் ரஹானே துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் சரிவர பந்து வீசவில்லை. இதில் டாஸ் வென்று இந்திய அணியை விளையாடச் சொன்ன அணித் தலைவர் ஹோல்டரும் அடங்குவார்.