இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியா வெற்றிகரமாக இராணுவ கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் ஒரு செயற்கைக்கோளுடன், 30 சிறிய செயற்கைக்கோள்களை அவற்றுன் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இவற்றுள் ஒன்று மட்டும் வெளிநாட்டு செயற்கைக்கோள். இது இஸ்ரோவின் மலிவு விலை விண்வெளித் திட்டத்திற்கான முக்கியமான மைல்கல்லாகும்.
இஸ்ரோ தொடர்ச்சியாக பி. எஸ். எல். வி ராக்கெட்டுகளை கொண்டு 40 வெற்றி பயணங்களை மேற்கொண்டுள்ளது. ராக்கெட் தரையிலிருந்து புறப்பட்டு 27 நிமிட நேரத்திற்குள்ளாக அனைத்து செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக அவற்றின் சுற்றுப் பாதையில் செலுத்தியது.
கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் தொலை உணர்வு சேவைகளை இனிவரும் தினங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை உணரும் கேமரா மற்றும் பிற நிறங்களை உணரும் கேமராக்கள் கார்ட்டோசாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. இஸ்ரோவின் சர்வதேச வாடிக்கையாளர்களான அமெரிக்காவின் 10 செயற்கைக்கோள்களும், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளின் தலா மூன்று செயற்கைக்கோள்களும், ஆஸ்திரியா, சிலி, செக் குடியரசு, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் இதில் அடங்கும். ஏவப்பட்ட பிற 30 செயற்கைக்கோள்களில் 15 கிலோ எடை கொண்ட நியுசாட் செயற்கைக்கோளும் ஒன்று. இது தமிழகத்தில் உள்ள நுருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவன செயற்கைக்கோள் ஆகும்.