Day: June 24, 2017

சீனாவில் நிலச்சரிவு : 15 பேர் பலி, 120 பேரை காணவில்லை

சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும் 120 பேரைக் காணவில்லை.   சீனாவின் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் குறிப்பாக மழைக்காலங்களில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்படுவது  வழக்கமாகும். தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள  ஜின்மோ கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண்களும், பாறைகளும் சரிந்து விழுந்தன. இதில் சுமார் பல வீடுகளுடன்,  140க்கும் மேற்பட்டோரும் …

சீனாவில் நிலச்சரிவு : 15 பேர் பலி, 120 பேரை காணவில்லை Read More »

Share

நட்பும் சுயநலமும்

“ஒவ்வொரு நட்பின் பின்னாலும் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் கலக்காத நட்பே இல்லை எனலாம். இதுதான் கசப்பான உண்மை.” – சாணக்கியர் “There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth.” -Chanakya

Share

வெங்கட் பிரபுவின் புதிய படம் “பார்ட்டி”

வெங்கட் பிரபுவின் புதிய படத்துக்கு ‘பார்ட்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா காஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவு …

வெங்கட் பிரபுவின் புதிய படம் “பார்ட்டி” Read More »

Share

உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தானை 6-1 என வீழ்த்தியது இந்தியா

லண்டனில் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்ற இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. பின்னர் காலிறுதியில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இன்று நடைபெற்ற 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இறுதியில், இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

Share

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ தயாரித்த மாணவருக்கு முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ – ஐ தயாரித்த மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார். 64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதுமான, இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ‘கலாம் …

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ தயாரித்த மாணவருக்கு முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி Read More »

Share

கோவை தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) சேவை வரும் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது என கூறப்படுகிறது. அவசர சிகிச்சை, நோயாளியின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் அடங்கியுள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எடுத்துச் செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு …

கோவை தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம் Read More »

Share

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் பின்னடைவை தவிர்க்க 85% இட ஒதுக்கீடு

செய்தி : நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் பின்னடைவை தவிர்க்க தமிழக அரசு தமிழக பாடத்திட்டப்படி படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு.

Share

மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு

கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் கூறினர். இதற்கு முன்னரும் இம்மூவரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிமுகவின் இரு கோஷ்டிகள், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்ததுடன், அதுபற்றிப் பேசுவதற்காக ஸ்டாலினை சந்தித்திருந்தனர். மேலும், மாட்டிறைச்சி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு …

மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு Read More »

Share

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம்

நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ்,  விசா மீறல் வழக்கில்  $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது. இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது. அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும்,  வரி …

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் Read More »

Share

கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும்

கத்தாருடனான் முன்பு போல நட்புறவு தொடர பிற அரபு நாடுகளான சவுதி அரேபியா, யூ.ஏ.இ., பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகியவை 13 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் முக்கிய நிபந்தனைகளான அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் நட்புறவைத் துண்டிப்பது ஆகியவையும் அடங்கும். மேலும், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம், ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் லெபனானின் ஈரானிய ஆதரவிலான ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளிட்ட குழுக்களுடனான உறவுகளை கத்தார் துண்டிக்கும்படி அரபு நாடுகளின் நிபந்தனை கூறுகிறது. கத்தாரிலிருக்கும், தங்கள் அரசுகளின் …

கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும் Read More »

Share
Scroll to Top