புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று 17 கூட்டணி கட்சிகள் என்னை ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் எதிர்கட்சிகளின் ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.