Day: June 23, 2017
ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …
ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு Read More »
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது. சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு …
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி Read More »
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார்
புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை …
யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகளுக்கு கவிஞர் ஜெயபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வு
சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகளுக்கு தமிழ் மொழியில் ஜெயபாரதி, வேலு சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 35 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படுகின்றன. இதற்காக சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் யுவ சாகித்ய புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு தகுதி …
யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகளுக்கு கவிஞர் ஜெயபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வு Read More »
சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்குள் விழுந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் மீட்பு
சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீயில் கருகி உருக்குலைந்தது. இதனால் 2–ந்தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6–வது தளத்தில் இருந்து பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் கீழே விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியது. 20–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை எடுக்கும் பணி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் …
சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்குள் விழுந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் மீட்பு Read More »
ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு
அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் தெரிவு செய்யப்பட்டார். தலித் தலைவராக இருந்த ஜக ஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகராகவும் இருந்த மீரா குமாரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தனர். முன்னதாக, பாரதீய ஜனதாவும் அதன் தோழமைக் கட்சிகளும் பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தன. ராம்நாத் கோவிந்தும் ஒரு தலித் தலைவரே. தமிழக …
ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு Read More »